Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆவின் கேக் வகைகள் விற்பனைக்கு அறிமுகம்!

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆவின் கேக் வகைகள் விற்பனைக்கு அறிமுகம்!

    பால்வளத்துறை அமைச்சர் நாசர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கான கேக் வகைகளை நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சிறப்பு கேக் வகைகளை தயார் செய்வதில் ஈடுபட்டு வருகிறது. மேலும் புதிய வகைகளை அறிமுகம் செய்து வருகிறது.

    பிளாக் ஃபாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரபிள் ஸ்ட்ராபெர்ரி கேக், பைனாப்பிள் கேக், வைட் ஃபாரஸ்ட் கேக், பட்டர் ஸ்காட்ச் கே,க் ரெயின்போ கேக் பிளாக் கரன்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக் ஆகியவை ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், இந்த கேக் வகைகளை நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, பால்வளத் துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுப்பையன், இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பொங்கல் பண்டிகைக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....