Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா: மகிழ்ச்சியில் பக்தர்கள்!

    கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா: மகிழ்ச்சியில் பக்தர்கள்!

    மதுரையில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது. 

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியை முன்னிட்டு திருவிழா கோலாகலமாக 10 முதல் 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம் ஆகும். இந்த ஆண்டு 12 நாட்கள் இத்திருவிழா நடைபெற உள்ளது. சித்திரை திங்களில் அந்த இந்திரனே இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. இன்று மதுரையில் காலை 10 மணிக்கு இத்திருவிழா தொடங்கியது. குறிப்பாக காலை 10.35 மணி முதல் 10.56 மணிக்குள் மிதுன லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 

    மேலும் சிறப்பு அம்சமாக வருகின்ற 12 ஆம் தேதி மீனாட்சி அம்மாளுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சித்திரை மாதத்தின் முதல் நாளான வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாண வைபோகம் உலக பிரசித்தி பெற்றது ஆகும். அதே நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி திருக்கல்யாணம் வைபோகம் முடிந்ததும் அந்த மாலை மாசி வீதிகளில் மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் நடைபெறுகிறது. 

    இதையடுத்து மறுநாள் ஏப்ரல் 15 ஆம் தேதி மாலை கள்ளழகர் எதிர்சேவை நடைபெற உள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் மிகப் பேர்பெற்ற திருவிழவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பக்தர்கள் இன்றி கோவில் உள்வளாகத்தில் மட்டுமே நடைபெற்றது இத்திருவிழா. இப்போது கொரோனா பெருந்தொற்று குறைந்துள்ளதால் இந்த சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு ஆண்டுகள் கழித்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளதால் ஏரளாமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திருவிழாவைக் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் இத்திருவிழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழாவினை பல செய்தி ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....