Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவெற்றிக்கு அருகில் வந்தப்பின் தூரச் சென்ற ஹைதராபாத்; மீண்டும் வாகை சூடியது லக்னோ!

    வெற்றிக்கு அருகில் வந்தப்பின் தூரச் சென்ற ஹைதராபாத்; மீண்டும் வாகை சூடியது லக்னோ!

    ஐபிஎல் தொடரானது சிறப்பாக அனைவரும் விரும்பும் வண்ணமே அரங்கேறி வருகிறது. அவ்வகையில் 15-ஆவது ஐபிஎல் தொடரின் 12 ஆவது போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன. 

    முதல் இன்னிங்ஸ் 

    அப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணியானது பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கில் களம் கண்டது.

    முதல் ஓவரில் பவுண்டரிகள் ஏதும் போகாத நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி எட்டப்பட்டது. அதே ஓவரின் நான்காவது பந்தில் குயின்டன் டி காக்கை விக்கெட் எடுத்து அசத்தினார், வாஷிங்டன் சுந்தர்.

    இதற்கு அடுத்து அணியின் மூன்றாவது ஓவரை மீண்டும் வீச வந்த வாஷிங்டன் சுந்தர், இம்முறை லூயிஸ் அவர்களின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதற்கு அடுத்து பேட்டிங் களமிறங்கினார், மணிஷ் பாண்டே. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இவரும் 11 ரன்களில் ரொமாரியோ செப்பர்ட் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

    மறுபுறம் நிதானமாக விளையாடிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் உடன் தீபக் ஹூடா இணைந்தார். இதன் பின் அணியின் ஸ்கோர் அதிகரிக்கத் தொடங்கியது. இருவரும் நன்றாக விளையாடி வந்த நிலையில், தீபக் ஹூடா 33 பந்துகளுக்கு 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பிறகு கே.எல்.ராகுல் தனது நிதான ஆட்டத்தை தொடர 68 ரன்கள் எடுத்திருந்த போது பெவிலியன் திரும்பினார். 

    இதற்கு பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இருபது ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 169 ரன்களை எடுத்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது.

    இரண்டாம் இன்னிங்ஸ் 

    பேட்டிங்கில் களமிறங்கிய ஹைதராபாத் அணியானது, சிறிய இடைவெளிகளில் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது.

    விழுந்த இரு விக்கெட்டுகளையும் அவேஷ் கான் அவர்கள் எடுத்து அசத்தினார். இதன்பிறகு ஹைதராபாத் அணியானது எய்டன் மார்க்ரம் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

    இச்சூழலில் களமிறங்கிய ராகுல் திரிபாதி ஹைதராபாத் அணியை சரிவில் இருந்து மீட்டார் என்றே கூற வேண்டும். 44 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் பெவிலியன் திரும்பினார். நம்பிக்கையாய் இருந்த நிக்கோலஸ் பூரானும் 34 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

    அதிர்ச்சிக்கு அதிர்ச்சியை சந்தித்த ஹைதராபாத் அணி இருபது ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது, சன் ரைசர்ஸ் ஹைதராபாத். ஆட்டநாயகன் விருதை லக்னோ அணியைச் சார்ந்த அவேஷ் கான் பெற்றார். 

    இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலுமே ஹைதராபாத் அணியானது தோல்வியைத் தழுவியுள்ளது. லக்னோ அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....