Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதடகளப் போட்டிகளில் சாதனை புரிந்த நண்பர்கள் : ஒருவர் கையில் தங்கம் மற்றொவர் கையில் சாதனை...

    தடகளப் போட்டிகளில் சாதனை புரிந்த நண்பர்கள் : ஒருவர் கையில் தங்கம் மற்றொவர் கையில் சாதனை !

    கோழிகோட்டில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் பங்கேற்று சாதனை புரிந்துள்ளனர். 

    பெடரேஷன் கோப்பை தடகளப்போட்டிகள் கோழிகோடு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர் மற்றும் ஆல்ட்ரின் நீளம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். 

    இதில் ஒருவர் தூத்துக்குடியின் அடையாளங்களில் ஒன்றான மஸ்கோத் அல்வாவை கண்டுபிடித்தவரின் பேரன் ஆவார். மற்றொருவர் கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த இந்தியாவிற்கு நம்பிக்கை அளிக்கும் நம்பிக்கை நட்சத்திரம் ஆவார். இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பது கூடுதல் தகவல். 

    நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இவர்கள் ஒன்பது முறை 8 மீட்டருக்கும் அதிகமான தூரங்களை தாண்டியுள்ளனர். இதன் மூலம் வரவிருக்கும் அமெரிக்க தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு புதிய பதக்கங்கள் கிடைக்கும் நம்பிக்கை கிடைத்துள்ளது. அதேபோல் இந்த இந்தியர்களிடம் இருந்து புதிய சாதனைகளையும் எதிர்பார்க்கலாம். 

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எரிதலில் தங்கம் வென்று இந்தியாவை உலக தடகள அரங்கில் தலைநிமிர வைத்திருந்தார். இப்பொழுது இந்த இரண்டு நண்பர்களின் செயல்பாடும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது புதுவிதமான நம்பிக்கையை அனைவர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. 

    இதில் ஆல்ட்ரின் 5க்கும் மேற்பட்ட முறை 8 மீட்டருக்கும் அதிகமான தூரத்தைத்  தாண்டி சாதனை படைத்தார். அதில் ஒன்று 8.37 மீட்டர் தூரம் ஆகும். ஆனால், அது விண்ட்- அசிஸ்டெட் ஆக இருந்தால் அதை தேசிய சாதனையாக கணக்கிட முடியவில்லை. 

    முரளி ஸ்ரீசங்கர் தன்னுடைய மூன்றாவது முயற்சியில் 8.36 தூரத்தைத் தாண்டினார். 10 சென்டி மீட்டர் தூரத்தை அதிகமாக தாண்டியதன் மூலம் தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்துள்ளார் இவர். முடிவாக ஆல்ட்ரின் தங்கப்பதக்கத்தையும், முரளி ஸ்ரீசங்கர் தேசியசாதனையும் சொந்தமாக்கினர். 

    ஸ்ரீசங்கர் தன்னுடைய தந்தையும் முன்னாள் ட்ரிபிள் ஜம்ப் வீரருமான முரளியால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறார். ஆனால், ஆல்ட்ரினுக்கு எவ்வித விளையாட்டு பின்னணியும் கிடையாது. இவரது தாத்தா தான் மஸ்கோத் அல்வா புகழ் ஜோசப் ஆபிரகாம் ஆவார். இதுகுறித்து ஆல்ட்ரின் கூறுகையில் நான் எப்பொழுது எல்லாம் வெற்றி பெருகிறேனோ, அப்பொழுதெல்லாம் என் குடும்பத்தினர் வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடுவர் என்று கூறியுள்ளார். 

    தடகள போட்டிகளில் இந்தியா சமீப காலங்களில் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறது. அது இன்னும் சில வருடங்களில் உச்சத்தினை எட்டும் உறுதியுடன் நம்பலாம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....