Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்குறையும் சீனாவின் மக்கள் தொகை; அதிகரிக்கும் வயோதிகர்களின் விகிதம்...

    குறையும் சீனாவின் மக்கள் தொகை; அதிகரிக்கும் வயோதிகர்களின் விகிதம்…

    சீனாவின் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளதும், வயோதிகர்களின் விகிதம் அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

    சீனா உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக திகழ்ந்து வருகிறது. மக்கள் தொகையை தொடர்ந்து அதிகரிப்பதில் சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தற்போதைய நிலையில், சீனாவில் 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    சமீபத்தில் சீனாவில் மக்கள் தொகை குறித்து கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில், 2022-ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை 141.18 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது முந்தைய ஆண்டின் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் இது சுமார் 8.50 லட்சம் குறைவாகும். மேலும், சீனா முழுவதும் கடந்த ஆண்டில் 95.6 குழந்தைகள் மட்டுமே பிறந்தன. முந்தைய ஆண்டில் 1.06 கோடி குழந்தைகள் பிறந்தனர்.

    இந்த கணக்கெடுப்புகளின் மூலம், உலகின் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட அந்த நாட்டில், வயோதிகர்களின் விகிதாச்சாரம் அதிகரிப்பது, மனித ஆற்றல் வளம் குறைவது போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் என்று எண்ணப்படுகிறது. மேலும், சீனா முழுவதும் இறப்பு விகிதம் பிறப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளது.

    தற்போதைய சூழலில், சீனாவில் 16 முதல் 59 வரையிலான வயதில் 87.56 கோடி பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 28 கோடி பேரும் உள்ளனர். இது போன்ற சூழல்களால் சீனா மக்கள் தொகை பெருக்கத்தை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    கேரளாவில் தொடரும் அசுத்த உணவு பிரச்சனை; 27 பேர் மருத்துவமனையில் அனுமதி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....