Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்குழந்தைகளுக்கு பதில் குரங்கு குட்டிகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல்! இப்படி கூடவா நடக்கும்?

    குழந்தைகளுக்கு பதில் குரங்கு குட்டிகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல்! இப்படி கூடவா நடக்கும்?

     ‘ஜாக்’ என்ற வனவிலங்கு காப்பகத்தில் இருந்து, மோங்கா, சீசர் மற்றும் ஹுசேன் என்ற மூன்று சிம்பன்சி குட்டிகள் கடத்தப்பட்டுள்ளன. 

    மனிதர்களை கடத்தி அவர்களின் உறவினர்களிடம் பணத்தை பெறுவதோ, கடத்தியவர்களுக்கு தேவையானதை பெறுவதோ இன்னமும் நடைபெற்றுதான் வருகிறது. குறிப்பாக, குழந்தைகளை கடத்துவது அதிகமாகவே நடைபெற்று வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாது. சிலைகள், விலங்குகள் போன்றவற்றை கடத்தி விற்பனை செய்வதும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளது. 

    இந்நிலையில், மத்திய ஆப்ரிக்காவின் காங்கோ பகுதியில் உள்ள ‘ஜாக்’ என்ற வனவிலங்கு காப்பகத்தில் இருந்து, மோங்கா, சீசர் மற்றும் ஹுசேன் என்ற மூன்று சிம்பன்சி குட்டிகளை மர்ம கும்பல் கடத்தி, “ஜாக்” வனவிலங்கு காப்பகத்தின் துணை நிறுவனரான ரோக்சேன் ஷாண்ட்ரோ-விற்கு வாட்சப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். 

    கடத்தல்காரர்கள், லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதோடு, பணத்தைக் கொடுக்க மறுத்தால், அந்த குட்டிகளைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அது மட்டுமின்றி, அவரது இரண்டு குழந்தைகளையும் கடத்தி கொன்றுவிடுவதாக கூறியும் அவருக்கு வாட்சப் மூலம் மிரட்டல் விடுத்து பதற வைத்த சம்பவம் காங்கோவில் நடைபெற்றுள்ளது. இதனால், தற்போது அந்நாட்டு காவல்துறை சிம்பன்சிகளை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: கனடாவை புரட்டிப் போட்ட ”ஃபியோனா புயல்” – 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி தவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....