Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்கம்; முதல்வர் ஸ்டாலின்...

    இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்கம்; முதல்வர் ஸ்டாலின்…

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்தை துவக்கி வைத்தார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலை துறை சார்பில், திருக்கோயில்களில் ராஜகோபுரங்கள் மகா மண்டபம் திருமண மண்டபங்கள் அர்ச்சகர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டிடப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    56 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 திருக்கோயில்களில் ராஜகோபுரங்கள் மகா மண்டபம் திருமண மண்டபங்கள் அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு வணிக வளாகம் மலைப்பாதை சீரமைத்தல் மதிற்சுவர் கட்டுதல் ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் கட்டுதல் போன்ற 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அறநிலையத்துறை சார்பில் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக
    ஒரு கோடியே 56 லட்சத்து 41 ஆயிரத்து 237 ரூபாய் மதிப்பிலான 19 புதிய வாகனங்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு துறையின் முதன்மை செயலர் சந்திரமோகன் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் விடியா அரசு! ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....