Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நயன்தாராவின் கனெக்ட்; வெளிவந்த பாசிட்டிவிட்டி பாடல்..

    நயன்தாராவின் கனெக்ட்; வெளிவந்த பாசிட்டிவிட்டி பாடல்..

    நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்திலிருந்து பாசிட்டிவிட்டியை தூண்டும் வகையில் பாடல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

    மாயா, கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர், அஸ்வின் சரவணன். இவரின் இயக்கத்தில் வெளிவந்த இரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. 

    இதைத்தொடர்ந்து, அஸ்வின் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியு்ள்ள திரைப்படம்தான், கனெக்ட். இத்திரைப்படத்தை  விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். ஹாரர் வடிவில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

    மாயா திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அஸ்வின் மற்றும் நயன்தாரா இணைந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. 

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் கனெக்ட் திரைப்படத்தின் டிரெயல்வர் வெளியாகியது. டிரெய்லரின்படி, ‘லாக்டவுன் சமயத்தில், ஒரு வீட்டில் இருவர் மட்டுமே இருக்கும்போது இருவரில் ஒருவருக்கு பேய் பிடித்தால் என்னவாகும், என்ன நிகழும்?’ என்பதை கதைக்களமாக கொண்டுதான் கனெக்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. தற்சமயம் வெளிவந்துள்ள டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், கனெக்ட் திரைப்படத்திலிருந்து பாசிட்டிவிட்டியை கொடுக்கும் வகையில் பாடல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா இணைந்து பாட, ‘நான் வரைகிற வானம்’ எனும் பாடல் வெளிவந்துள்ளது. 

    பிரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்பாடலுக்கு கதிர்மொழி சுதா பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடல் தற்போது யூடியூபில் காணக்கிடைக்கிறது. 

    மேலும், 95 நிமிட கால அளவைக் கொண்டுள்ள கனெக்ட் திரைப்படம் இடைவேளை ஏதுமின்றி திரையரங்குகளில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக, கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி கனெக்ட் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    ‘திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அவசியம்’ – வலியுறுத்திய திருநங்கை நீதிபதி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....