Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்பசி பட்டினி இல்லா நாடாக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

    பசி பட்டினி இல்லா நாடாக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி மற்றும் கோதுமை வழங்குவதால் பசி பட்டினி இல்லா தமிழ்நாடு உருவாகியிருப்பதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநில முதலமைச்சர்களை தலைவராக கொண்டு குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவின் இரண்டாவது குழு கூட்டம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூடி, மத்திய அரசின் நிதியோடு செயல்படுத்தபடும் தற்போதைய திட்டங்களின் நிலை, நிதி செலவுகள், எத்தனை திட்டங்கள் நிறைவேற்றபட்டுள்ளது, அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென
    ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஐந்து முதன்மை குறிக்கோள்களை கொண்டு செயல்படும் திட்டங்கள் தொடர்பாக பேசினார், அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பகுதி மேம்பாட்டு திட்டம் தொகுதி நிதி தொடர்பாகவும்,தேசிய நல்வாழ்வு குழுமம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதமர் முன்னோடி கிராமத்திட்டம், திட்டங்களின் நிலையை தொடர்ந்து பார்த்து வருவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் 2019 மற்றும் 2020ம் ஆண்டில் 3,471 பணிகளில் 3043 பணிகள் நிறைவடைந்து, 428 பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதேபோல் 2021 மற்றும் 2022ம் ஆண்டில் 1015 பணிகளில் 570 பணிகள் முன்னேற்றத்தில் இருப்பதாகவும், விரைந்து மீதமுள்ள அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டுமென கூறிய முதலமைச்சர், மேலும் தேசிய குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் 54,439 அங்கன்வாடி மைய்யங்கள் மூலம் 27லட்சத்து774 குழந்தைகள் பயனடைந்து வருவதாகவும், 7லட்சத்து 51 ஆயிரத்து 673 கர்ப்பிணிப்பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் சிறப்பாக பயனடைந்து வருவதாகவும், உட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்குவதாகவும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மூலம் சேஷன் அடைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக தமிழ்நாட்டில் வழங்கபடுவதால் பசி, பட்டினி இல்லாத இலக்கை தமிழகம் எட்டியிருபதாகவும், திட்டங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு, ஒவ்வொரு விதத்தில் உதவி புரியும். இவை அனைத்தையும் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும் என்றும் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சிகளில் சமமான வளர்ச்சியே சமூக நீதி, சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருந்திட வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, ஆ ராசா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், காங்கிரஸ் கட்சி திருநாவுக்கரசர், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விஜய்யின் திரைப்படத்தை கைப்பற்றியது யார்? மாஸ்டர் செய்த மாயத்தை வாரிசு செய்யுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....