Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த தங்கவேலுவின் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

    இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த தங்கவேலுவின் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

    இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த திமுக நிர்வாகி தங்கவேலுவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

    சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவருக்கு வயது 85. இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணியின் பொறுப்பாளராக இருந்தவர் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இவர் பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர். 

    இந்த நிலையில், இன்று தங்கவேல் தாழையூர் திமுக அலுவலகத்திற்கு சென்று இந்தி திணிப்பை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினார். அப்போது திடீரென கேனில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இவரை காப்பற்ற அருகில் இருந்தவர்கள் முயற்சி செய்தனர். இருப்பினும் தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

    இதனிடையே இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த திமுக நிர்வாகி தங்கவேலுவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

    இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சேலம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை தமிழ்நாட்டு மண்ணிலிருந்து எழுதபட வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலின்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....