Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இந்தி திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நடிகரான விக்ரம் கோகலே காலமானார்

    இந்தி திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நடிகரான விக்ரம் கோகலே காலமானார்

    இந்தி திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நடிகரான விக்ரம் கோகலே, இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 

    இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகரான விக்ரம் கோகலே, அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘அக்னிபத்’ அதேபோல், சல்மான் கானுடன் இணைந்து ‘ஹம் தில் தேசுகே சனம்’ உள்பட பல மராத்தி திரைப்படங்களில் இவர் நடித்தார். 

    இவரின் கடைசி திரைப்படமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘நிகம்மா’ திரைப்படம் அமைந்துள்ளது. 

    இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கோகலே புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று விக்ரம் கோகலே உயிரிழந்தார். தற்போது அவருக்கு வயது 77 ஆகும். 

    இதனிடையே அவரது இறுதி சடங்குகள் புனேவில் உள்ள வைகுண்ட சம்ஷன் பூமியில் மாலை 6 மணிக்கு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் கோகலேவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல ரவுடி வெட்டிக்கொலை! கஞ்சா தொழில் போட்டிதான் காரணமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....