Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா108 அவசர ஊர்தியில் டீசல் இல்லாததால் பறிபோன உயிர்

    108 அவசர ஊர்தியில் டீசல் இல்லாததால் பறிபோன உயிர்

    ராஜஸ்தானில் அவசர ஊர்தியில் டீசல் இல்லாத காரணத்தினால் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டம், தனப்பூர் என்று பகுதியைச் சேர்ந்தவர் தேஜ்யா. இவருக்கு வயது 40. இந்நிலையில், நேற்று இவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். 

    உடனே, அவரது உறவினர்கள் 108 அவசர ஊர்தியை அழைத்து, அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

    இதைத்தொடர்ந்து, தனப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 அவசர ஊர்தி திடீரென நடு வழியிலேயே நின்று விட்டது. அவசர ஊர்தியில் டீசல் இல்லாததே காரணமாக கூறப்படுகிறது. 

    இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, கீழே இறங்கி அவசர ஊர்தியை தள்ளிச் சென்றனர். மருத்துவமனைக்கு தேஜ்யாவை கொண்டு செல்வதில் தாமதம் ஆனதால், அவர் அவசர ஊர்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவசர ஊர்தியில் டீசல் இல்லாத காரணத்தினால் தான் தேஜ்யா உயிரிழந்ததாக உறவினர்கள், காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

    ‘அந்த நாளை மறுக்கமுடியாது’ – நெகிழ்ந்த விராட்கோலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....