Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு12-ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை..

    12-ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை..

    பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில் மாணவனை காவல்துறை கைது செய்தது. 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் அரங்கேறிய நிகழ்வு சமூகவலைதளங்களில் காட்டூத்தீயாக பரவி வருகிறது.

    அப்படி என்ன நடந்தது என்றால், அந்த பேருந்து நிறுத்தத்தில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் சீரூடையில் இருக்கும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவர் தாலி கட்டியுள்ளார். 

    மாணவி 12-ம் வகுப்பு படித்து வருகிறார் .தாலி கட்டிய மாணவர் தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்… தொடரை கைப்பற்றிய இந்தியா!

    இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த மாணவி மற்றும் மாணவரை சிதம்பரம் காவல்துறையினர் காவல்நிலையம் அழைத்து வந்தனர். அவர்களது பெற்றோர்களையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர். இதன்பின் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதனிடையே, இந்நிகழ்வு பற்றி தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், பள்ளி மாணவிக்கு தாலி காடிய விவகாரம் தொடர்பாக பாலிடெக்னிக் மாணவரை கைது செய்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் மாணவனை கைது செய்துள்ளனர்.

    முன்னதாக, மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோவை முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....