Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாரத் ஜோடோ யாத்திரை; ராகுல் காந்தி குழந்தைகளை தவறாக பயன்படுத்தினாரா? ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    பாரத் ஜோடோ யாத்திரை; ராகுல் காந்தி குழந்தைகளை தவறாக பயன்படுத்தினாரா? ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    ‘ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடா யாத்திரையில் குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர்’ என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

    “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர்” என்று தேர்தல் ஆணையத்துக்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. 

    பாரத் ஜோடோ யாத்திரையின் போது குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், காங்கிரஸ் சட்டத்தை மீறுகிறது. அதனால், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை குழந்தைகள் உரிமை அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ள புகாரை ‘முழு பொய்’ என விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க :சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: நாம் செய்ய வேண்டியது என்ன? 

    இதுகுறித்து, அவர் கூறியதாவது:

    தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய செய்தித் தொடர்பாளர் என்ன செய்ய வேண்டும் என்பதை, அவருக்கு அறிவுறுத்தும் சில நபர்களின் பேச்சை அவர் பின்பற்றுகிறார். 

    இந்த போலிப் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளோம். ஓவியப் போட்டிக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான பரிசு வழங்கும் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு குழந்தைகளிடம் ராகுல் காந்தி கேட்கவில்லை. 

    2007 ஆம் ஆண்டு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஆணையத்திற்கு ‘பாஜக-ஆர்எஸ்எஸ் பிரமுகர்’ ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....