Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடடங்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

    அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடடங்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

    சென்னையில் விதி மீறிய 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டுவதாலும், விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பானை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குப் பிறகு, மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும் என்று கூறியிருந்தது.

    இதன்படி ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 20 வரை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தற்போது சென்னையில் 2,403 கட்டிடங்களை சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகவும், 39 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....