Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மறுசீரமைப்பு; புதுசா, சிறுசா, இனி 23 மண்டலங்கள்!

    சென்னை மறுசீரமைப்பு; புதுசா, சிறுசா, இனி 23 மண்டலங்கள்!

    சென்னை மாநகராட்சி 23 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இதன்படி எந்த மண்டலத்தில் எத்தனை வார்டுகள் என்பது தொடர்பான வரைவு அறிக்கையை சென்னை மாநகராட்சி தயார் செய்துள்ளது.

    கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பெருநகரம் அந்தஸ்த்தை பெற்றது. அதன்பின்னர் 155 வார்டுகள், 10 மண்டலங்களுடன் செயல்பட்டு வந்தது. பின்னர் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்த பேரூராட்சி பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 200 வார்டுகளாக உயர்த்தப்பட்டன. இதனால் மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையும் 15 ஆக உயர்ந்தது.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 மண்டலங்கள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சென்னையில் ஒரு சில மண்டலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகள் ஒரே மண்டலத்தின் எல்லையில் வருவதால் நிர்வாக பிரச்சனை ஏற்படுகிறது.

    அதன் காரணமாக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையில் மண்டலங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட திட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதனால், பெரிய மண்டலங்களில் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றில் காலதாமதமும், நடைமுறை சிக்கல்களும் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

    எனவே, பெரிய மண்டலங்களில் சிலவற்றிலிருந்து வார்டுகளை பிரித்து, புதிய மண்டலங்கள் உருவாக்க வேண்டும் என, அதிகாரிகள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சியில், சட்டசபை தொகுதிக்கு ஏற்ப, மண்டலங்களை அதிகரிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

    இதன்படி சென்னை மாநகராட்சி மொத்தம் 23 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இதன்படி 23 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்ற வகையில் 23 மண்டலங்கள் அமைக்கப்படவுள்ளன.

    முதல் மண்டலத்தில் 18 வார்டுகள், 2வது மண்டலத்தில் 15 வார்டுகள், 3வது மண்டலத்தில் 7 வார்டுகள், 4வது மண்டலத்தில் 7 வார்டுகள், 5வது மண்டலத்தில் 7 வார்டுகள், 6வது மண்டலத்தில் 6 வார்டுகள், 7வது மண்டலத்தில் 6 வார்டுகள், 8-வது மண்டலத்தில் 6 வார்டுகள், 9வது மண்டலத்தில் 6 வார்டுகள், 10வது மண்டலத்தில் 13 வார்டுகள், 11வது மண்டலத்தில் 7 வார்டுகள், 12வது மண்டலத்தில் 6 வார்டுகள்,13 வது மண்டலத்தில் 7 வார்டுகள், 14வது மண்டலத்தில் 7 வார்டுகள், 15வது மண்டலத்தில் 7 வார்டுகள், 16வது மண்டலத்தில் 6 வார்டுகள், 17வது மண்டலத்தில் 15 வார்டுகள், 18வது மண்டலத்தில் 12 வார்டுகள், 19வது மண்டலத்தில் 7 வார்டுகள், 20வது மண்டலத்தில் 7 வார்டுகள், 21வது மண்டலத்தில் 8 வார்டுகள், 22வது மண்டலத்தில் 11 வார்டுகள், 23வது மண்டலத்தில் 9 வார்டுகள் என மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறையின் குழப்பங்கள்: முற்றுப்புள்ளி வைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....