Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பள்ளிக்கல்வித்துறையின் குழப்பங்கள்: முற்றுப்புள்ளி வைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

    பள்ளிக்கல்வித்துறையின் குழப்பங்கள்: முற்றுப்புள்ளி வைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

    பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைபெற்று வரும் நிலையில், தேர்வு தேதியை தவிர்த்து, மற்ற நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால், மாணவர்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பள்ளிக்கல்வித்துறை குழப்பங்களை தீர்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.

    இதுபற்றி, அறிக்கை ஒன்றை வெளியிட்டது கமல்ஹாசன் தலைமையிலான மிக்கள் நீதி மய்யம் கட்சி. அதில், பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் குழப்பங்களால் மாணவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு இல்லையா என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்புகிறது.

    கடந்த வாரம், 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி, மே மாதம் 6 ஆம் தேதி முதல் 13 ம் தேதி வரை இறுதித் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. பெரும்பாலான அரசு பள்ளிகள், மே 5 ஆம் தேதி முதலே இறுதித் தேர்வுகளை நடத்த திட்டமிட்டது.

    இதனை, பள்ளி மாணவர்களுக்கும் அறிவித்து விட்டார்கள். மேலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்ற காரணத்தால், தேர்வு நாட்களைத் தவிர பிற நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம், என்ற புதிய அறிவிப்பு மே மாதம் 4 ஆம் தேதி வெளியானது.

    ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வத் தகவல் பள்ளிகளுக்கு சரியான முறையில் தெரிவிக்கப்படாதது மாணவர்களை இன்னுலுக்கு உள்ளாக்கியுள்ளது. மே 5 ஆம் தேதி அன்று காலையில் தேர்வு எழுத வந்த 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லை என்ற கூறியமையால் மாணவர்கள் மிகக் கடுமையான வெயிலில் மாணவர்கள் திரும்பி வந்துள்ளனர். மாணவர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றும் அரசின் அக்கறை இவ்வளவு தானா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இதைப் போலவே, 12 ஆம் வகுப்பத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பள்ளிக்கு காலை 8 மணிக்கு வரச்சொல்லி அறிவித்தது. பிறகு, 9 மணி என்று மாற்றியமைத்தனர். முகக்கவசம் தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகி பிறகு, அடுத்த நாளே முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது.

    இப்படி மாற்றி மாற்றி குழப்பும் பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஆனால் அதே வேளை தனியாக தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என்ற கடுமையான அறிவிப்பும் இதில் அடங்கும். மாணவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் பள்ளிக்கு செல்லாமல், கடுமையான மன உளைச்சலில் இருந்ததை பள்ளி கல்வித்துறை உணர்ந்துள்ளதா என தெரியவில்லை. 32,674 மாணவர்கள், 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வில் பங்கேற்கவில்லை என்பதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

    இரண்டு ஆட்சிகளிலும் குழப்பமே நீடிக்கும் நிலையில், உன் பெயர்தான் பள்ளிக்கல்வித்துறையா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது. இனியேனும் குழப்பங்கள் இல்லாமல், தெளிவாக மற்ற துறைகளின் ஒருங்கிணைப்போடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் குறிப்பிட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....