Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா"தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்".. சென்னையில் இருந்து தொடங்கியது சோதனை ஓட்டம்..!

    “தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்”.. சென்னையில் இருந்து தொடங்கியது சோதனை ஓட்டம்..!

    சென்னை-பெங்களூரு-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள். இதனை கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. 

    இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி – காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை – காந்தி நகர் வழித் தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் 5-வது சேவை சென்னை-பெங்களூரு-மைசூரு வழி தடங்களில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி வருகிற நவம்பர் 11 ஆன் தேதி தொடங்கி வைக்க உள்ளார். 

    இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும். பிறகு, பெங்களூருவுக்கு காலை 10.30 மணிக்கு செல்லும். அதன்பின், மதியம் 12.30 மணிக்கு மைசூர் சென்றடையும். தற்போது இயக்கப்பட உள்ள இந்த ரயில் மணிக்கு 75.60 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே செல்லும். அதற்கு காரணம் இந்த வழித்தடத்தில், லெவல் கிராசிங்குகள், ரயில் வழித்தடங்களை ஒட்டி பல இடங்களில் தடுப்புச்சுவர் கட்டப்படாமல் இருப்பது, நகர்ப் பகுதிகள் அதிகம் இருப்பது காரணமாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், சென்னை-பெங்களூரு-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. 

    இதையும் படிங்க: 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு: அரசியல் கட்சி தலைவர்களின் கண்டனங்களும்…வரவேற்பும்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....