Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு சென்னை அண்ணா நகர் கோபுரம்...

    விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு சென்னை அண்ணா நகர் கோபுரம்…

    சென்னை அண்ணா நகர் கோபுரம், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்னும் 10 நாள்களில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    சென்னை அண்ணா நகரில் கோபுரம் சென்னை மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும். 138 அடி கொண்ட இந்த கோபுரம் 1960-ல் கட்டப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இந்த கோபுரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி அளிக்கப்படவில்லை.

    கடந்த 2011ல் ஒரு காதல் ஜோடி கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதையடுத்து பாதுகாப்பு பிரச்னை காரணமாக கோபுரத்தின் மேல் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், கோபுரத்தில் ஏறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 

    இந்நிலையில், கடந்த ஓராண்டாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனின் ஒரு பகுதியாக கோபுரத்தில் பாதுகாப்புப் பணிகள், புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    இதைத்தொடர்ந்து, பூங்கா 10 நாள்களில் திறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது கலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோபுரத்தில் கலாசார ஓவியங்கள், அழகியல் சீரமைப்புப் பணிகளுடன் பாதுகாப்புக்காக க்ரில் கம்பிகளை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்து. 

    பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்; சைலேந்திர பாபுவுக்கு கெடு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....