Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இனி ட்விட்டரில் கதையே எழுதலாம்... எலான் மஸ்க்கின் அதிரடி..

    இனி ட்விட்டரில் கதையே எழுதலாம்… எலான் மஸ்க்கின் அதிரடி..

    ட்விட்டரில் இனி ஒரு பதிவில் 4000 எழுத்துகள் வரையில் பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு சம்பவங்கள் ட்விட்டரில் நிகழ்ந்து வருகின்றன. ப்ளூ டிக் கட்டண உயர்வு, ஆட்கள் குறைப்பு, வருவாய் இரட்டிப்பு திட்டம் போன்ற செயல்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணமே உள்ளது. 

    இந்த மாற்றங்கள் பலவும் ட்விட்டர் பயனர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் பயனர்கள் ஏற்கும் வகையில் ஒரு புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது. 

    அதாவது, ட்விட்டரில் ஒரு பதிவில் அதிகபட்சமாக இதுவரை 280 எழுத்துகள் மட்டுமே பதிவிடும் வண்ணம் உள்ளன. ஆனால், இனி ஒரு பதிவில் 4000 எழுத்துகள் வரையில் பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது, விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வந்துள்ளது. 

    முன்னதாக, ட்விட்டரில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார், அதாவது பல வருடங்களாக ட்விட் அல்லது ட்விட்டரில் உள்நுழைவு இல்லாத சுமார் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    விறுவிறுப்பான கட்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை; அரையிறுதி ஆட்டத்தில் எந்தெந்த அணிகள்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....