Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளி மாணவர்களுக்கு “குட் நியூஸ்”- உங்களுக்கான காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா?

    பள்ளி மாணவர்களுக்கு “குட் நியூஸ்”- உங்களுக்கான காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா?

    காலாண்டு விடுமுறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டு புதிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இப்போது நடைபெற்று வருகிறது. மேலும் காலாண்டு தேர்வு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 9ஆம் தேதி வரையும், 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரையும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    இதையும் படிங்க: இந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்சநீதிமன்ற வழக்கு நேரலை

    அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், 06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்.)

    பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் (ந.எண்.2411/ஈ2/2021 நாள்.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது. 

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....