Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிக்கரணை சாலை தடுப்பு சுவரில் கார் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

    பள்ளிக்கரணை சாலை தடுப்பு சுவரில் கார் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

    பள்ளிக்கரணை சாலை தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதிய விபத்தில் இளம்பெண் மென் பொறியாளர் உயிரிழந்தார். 

    கோவை மாவட்டம், பொள்ளாட்சியைச் சேர்ந்தவர் கிருத்திகா அருணா. வயது 24. மென்பொருள் பொறியாளரான இவர், சென்னை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் இருக்கும் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். 

    இந்நிலையில் நேற்று காலை கிருத்திகா அருணா, தனது நண்பர்களுடன் சென்னையைச் சுற்றி பார்ப்பதற்காக புறப்பட்டார். காரை ஸ்ரீதர் என்ற நபர் இயக்க அருகில் மற்றொரு நபரும், பின் இருக்கையில் கிருத்திகா அருணாவும் அவரது தோழியும் அமர்ந்து இருந்தனர். 

    துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி சென்றபோது, சொகுசு கார் திடீரென பள்ளிக்கரணை குப்பை கிடங்கு அருகே இருக்கும் சாலையோர துடிப்பு சுவரில் மோதி கவிழ்ந்து முழுவதும் நொறுங்கியது. 

    இந்த விபத்தில், அனைவரும் படுகாயமடைந்தனர். மேலும் கிருத்திகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக இச்சம்பவம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த நால்வரும் பள்ளிக்கரணையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிருத்திகா அருணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்தச் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ‘மரத்தின் வேராக மிஷ்கினின் அந்த பிசாசு இருக்கிறது’ – பிசாசு ஒரு பார்வை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....