Saturday, April 27, 2024
மேலும்
    Homeஅறிவியல்நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கிய செயற்கைகோள்!

    நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கிய செயற்கைகோள்!

    நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 25 கிலோ எடை கொண்ட “கேப்ஸ்டோன்” செயற்கைகோளை 6 நாள்களுக்கு முன்பு விண்ணில் ஏவியது.

    ‘ராக்கெட் லேட்’ மற்றும் ‘அட்வான்ஸ்ட் ஸ்பேஸ்’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து  அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, 25 கிலோ எடை கொண்ட “கேப்ஸ்டோன்” செயற்கைகோளை விண்ணில் ஏவியது. 

    இந்த கேப்ஸ்டோன் செயற்கை கோளானது நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது. 

    இந்நிலையில், பூமியின் சுற்று வட்ட பாதையை அடைந்த கேப்ஸ்டோன் செயற்கைகோள் அதிலிருந்து விலகி வெற்றிகரமாக நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “கேப்ஸ்டோன்” செயற்கைகோள் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த செயற்கைகோள் குறித்து ராக்கெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறியுள்ளதாவது: 

    “மீதமுள்ள பணிகள் வெற்றிகரமாக நடந்தால் கேப்ஸ்டோன் செயற்கைகோள், நிலவை சுற்றி ஒரு புதிய சுற்றுப் பாதையில் செல்லும். மேலும், இச்செயற்கைகோள் பல தகவல்களை அனுப்பும்” என்று கூறியுள்ளார். 

    இந்து மதத்தை புண்படுத்தியதாக உத்தரபிரதேசத்தில் ஒருவர் கைது!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....