Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒப்பந்த ஊழியர்

    கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒப்பந்த ஊழியர்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒப்பந்த ஊழியர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆந்திர மாநிலத்தில் கஞ்சா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயிரிடுதல், கடத்தல், உட்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்தும் தண்டனைக்கு உரிய குற்றமாகும். இந்த நிலையில், திருப்பதி ஊழியர் ஒருவரிடம் நேற்று கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

    திருப்பதியில் உள்ள அலிபிரி சப்தகிரியில் சந்தேகப்படும் வகையில், ஒரு நபர் கையில் பையுடன் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அவர் மீது சந்தேகத்தின் பேரில் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஒப்பந்த ஊழியர் என்பது தெரியவந்தது. 

    மேலும் அவரது கால்களில் பிளாஸ்டிக் பைகளை சுற்றி கட்டி வைத்துள்ளார். அதனை அவிழ்த்து காவல்துறையினர் சோதனை செய்ததில் 15 பாக்கெட்டுகளில் 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே ganja in tirumala என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

    இந்நிலையில் ட்விட்டர் தளத்தில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திருமலைக்கு கஞ்சா கடத்தி சென்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், இதனால் பக்தர்கள் மிகவும் கலக்கமும், கோபமும் அடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் இந்த விவகாரம் குறித்து தேவஸ்தானம் விரைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரலாற்றில் இதுவரை திருப்பதியில் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை என்றும் சந்திரபாபு நாயுடு ஆளும்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    நலன் குமாராசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தியா ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....