Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு"இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நான் இருந்தாலும்..." - ஷிகர் தவான் பேச்சு..

    “இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நான் இருந்தாலும்…” – ஷிகர் தவான் பேச்சு..

    இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பில் சிறப்பாக செயல்படும் போது, நடப்பவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். 

    இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். குறிப்பாக இவர் மற்றும் ரோஹித் சர்மாவின் பார்டனர்ஷிப் அதிகளவில் பேசப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. ஷிகர் தவானும் பல முக்கிய நேரங்களில் இந்திய அணிக்கு கைகொடுத்துள்ளார். 

    ஆனால், தற்போது ஃபார்ம் குறைவு காரணமாக இந்திய அணியில் அவர் இடம்பெறாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து மனம் திறந்துள்ளார். 

    அப்பேட்டியில் அவர் கூறுகையில், “இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நான் இருந்தாலும் எனக்கு பதிலாக சுப்மன் கில்லையே தேர்வு செய்வேன். காரணம் என்னவென்றால் அவர் டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட்டில் தனது உச்சபட்ச ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். 

    ரோகித் சர்மா கேப்டன்சியை எடுத்துக் கொண்ட போது, அவரும் டிராவிட்டும் எனக்கு முழு ஆதரவையும் கொடுத்தனர். 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

    ஆனால் இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பில் சிறப்பாக செயல்படும் போது, நடப்பவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசுவதற்கு முன்வரை, எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றே நினைத்தேன். ஆனால் இரட்டை சதத்திற்கு பின், அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

    இது எனக்கு மட்டுமல்ல, இதற்கு முன் பலருக்கும் நடந்திருக்கிறது. அதனால் இதனை பெரிதுபடுத்த தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார். 

    நலன் குமாராசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தியா ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....