Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஒருநாள் உலகக் கோப்பையிலும் பும்ரா இல்லையா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    ஒருநாள் உலகக் கோப்பையிலும் பும்ரா இல்லையா? – வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர், பும்ரா. 29 வயதாகும் இவர் இதுவரையில் இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

    முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பும்ரா இடம்பெறவில்லை. இதன்பிறகு, பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்துள்ளதாக கூறப்பட்டது. 

    இதனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். பின்னர் உடல்நிலை முழுத் தகுதியை அடையவில்லை எனக்கூறி இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் பும்ரா சேர்க்கப்படவில்லை. 

    பும்ரா ஐபிஎல்-லில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில்  பும்ரா பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பும்ரா விளையாடும் மும்பை அணிக்கு இது பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில் பும்ரா அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதுகுப்பகுதியில் உள்புறத்தில் தீவிரமான பிரச்னை இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டால் 6 மாதங்கள் வரை குணமடைய எடுத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. இதனால் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவர் பங்கேற்பது சிரமம் தான் எனக் கூறுகின்றனர்.

    அக்டோபர், நவம்பர் மாதம் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியே அவரது இலக்கு. அதுவும் உறுதி கிடையாது என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மனைவியை அறைந்த கணவனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....