Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதடையாக இருப்பதைத் தகர்த்தெறி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தடையாக இருப்பதைத் தகர்த்தெறி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் பகுத்தறிவு பாதையில் செல்ல வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கங்களை வழங்கினார். 

    இவ்விழாவில், தமிழக முதலவர் மாணவர்களை நோக்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    கையில் பட்டத்துடனும் கண்களில் கனவுகளுடன் அமர்ந்திருக்கும் மாணவ மாணவிகளுக்கு எனது வாழ்த்துகள்.

    பட்டம் பெற்ற நீங்கள் தான் நாட்டின் திருவிளக்கு. பட்டம்பெற்ற நீங்கள்தான் நாட்டை செழிக்கச் செய்யும் வல்லுநர்கள்.

    இந்தப் பட்டத்தோடு உங்கள் படிப்பு முடிந்துவிடுவதில்லை. அந்த பட்டத்தை நோக்கி உயருங்கள். பட்டங்கள் என்பது வேலை வாய்ப்புக்காக மட்டும் அல்ல, உங்கள் அறிவாற்றலையும் வளர்த்து கொள்வதற்காக என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

    கல்வி என்பது யாராலும் பறிக்க முடியாத சொத்து. தமிழர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக் கூடியவர்கள். 

    பழைமைவாதத்தை புறந்தள்ளி புதிய கருத்துகளை ஏற்று, மாணவர்கள் பகுத்தறிவு பாதையில் நடைப்போடுவதுடன், வளர்ச்சிக்கு தடையாக இருப்பதைத் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும். 

    இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

    மாணவர்களின் வெற்றியே, இந்தியாவின் வெற்றி- பிரதமர் மோடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....