Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கண்ணாமூச்சி விளையாடி 2,300 மைல்கள் தூரம் சென்ற 15 வயது சிறுவன்

    கண்ணாமூச்சி விளையாடி 2,300 மைல்கள் தூரம் சென்ற 15 வயது சிறுவன்

    நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் 2,300 மைல்களுக்கு அப்பால் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    வங்கதேசத்தின் துறைமுக நகரமான சிட்டகாங் பகுதியில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி 15 வயது சிறுவனான ஃபஹிம் கண்ணாமுச்சி விளையாடிக் கொண்டிருந்தார். ஃபஹிம் தனது நண்பர்களுடன் அங்குள்ள கண்டெயினருக்குள் ஒளிந்து கொண்டு விளையாடி உள்ளார். அப்போது ஃபஹிம் இருந்த கண்டெய்னர் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டது. இதனை அறியாத அந்த சிறுவன் கண்டெய்னருக்குள்ளேயே சிக்கிக் கொண்டான். 

    சுமார் 6 நாட்களாக அந்தச் சிறுவன் கண்டெயினருக்குள்ளேயே பசியாலும் நீரிழப்பு மற்றும் காய்ச்சலாலும் சிறுவன் அவதிபட்டிருக்கிறார். மலேசியா சென்ற கண்டெயினரை திறந்து பார்த்த பணியாளர்கள் ஹார்பர் அதிகரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். முன்னதாக குழந்தை கடத்தலாக இருக்குமா என்று சந்தேகித்த அதிகாரிகள் பிறகு, சிறுவனை மீட்டு மலேசிய காவல்துறையினர் மருத்துவனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். 

    இதுகுறித்து பேசிய மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைப்புதீன், விளையாட்டாக கண்டெயினருக்குள் புகுந்த சிறுவன் ஃபஹிம் அங்கேயே தூங்கியதால் இங்கு வந்தததாக தெரிவித்தார். 

    ஃபஹிமை கண்டெய்னரில் இருந்து வெளியேற்றும் காணொளி ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது. 

    ‘மக்களவை அதிமுக தலைவர் ரவீந்திரநாத்’ – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அழைப்பால் சலசலப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....