Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி 67 : வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தளபதி 67 : வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. 

    நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. அதேநேரம், திரைப்படத்தின் வசூல் என்பது அபரிவிதமாக உள்ளது. 

    இதைத்தொடர்ந்து, விஜய்யின் 67-ஆவது படத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்ததாகவும் தகவல்கள் வந்தன. 

    இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், தற்போது விஜய்யின் 67-ஆவது படம் குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. 

    அதன்படி, மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யுடன், லோகேஷ் கனகராஜ் இணைகிறார். மேலும், இத்திரைப்படத்தை 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி -67’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து,  ‘தளபதி -67’ படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் படக்குழு தகவல்களை வெளியிட்டுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகவும், தினேஷ் நடன இயக்குநராகவும், அன்பு, அறிவு சண்டைப் பயிற்சியாளர்களாகவும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். 

    இத்துடன், கத்தி, மாஸ்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக மீண்டும் ‘தளபதி -67’ மூலம் இசையமைப்பாளர் அனிரூத் நடிகர் விஜய்யுடன் இணையவுள்ளார். 

    மேலும், லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் அண்ணுடன் மீண்டும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

    ‘தளபதி-67’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2-ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருவதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    கண்ணாமூச்சி விளையாடி 2,300 மைல்கள் தூரம் சென்ற 15 வயது சிறுவன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....