Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅனைவரும் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    அனைவரும் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். 

    சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிதி அயோக் உறுப்பினரான வி.கே. பால் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது அவர், விமானப் போக்குவரத்து தற்போதுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடரும் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

    27-28 % மக்கள் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளதாகவும், மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    தொடர்ந்து பேசிய நிதி அயோக் உறுப்பினரான வி.கே. பால், பூஸ்டர் டோஸ் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    மாமல்லபுரம் வந்து பயிற்சி மேற்கொண்ட 50 இளம் புத்தமத துறவிகள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....