Saturday, March 16, 2024
மேலும்
    HomeUncategorizedமுழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட முகலாயம் சிங் யாதவ் உடல் ...

    முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட முகலாயம் சிங் யாதவ் உடல் …

    உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் அவர்களின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

    இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரிய தலைவர்களில் மிக முக்கியமான ஒருவர் தான் முலாயம் சிங் யாதவ் .இவர் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் கூட . இவர் மூன்று முறை உத்தர பிரதேசத்தின் முதல்வராகவும் , 10 முறை எம்.எல்.ஏ.,வாகவும், ஏழு முறை எம்.பி.,யாகவும்,மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரின் மகன்தான் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் .82 வயதாகும் முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த திங்கள் கிழமை வரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், பின்னர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ,பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இதையும் படிங்க:ஹாலோவீன் பயமுறுத்தலால் நடுங்கிப் போன அப்பாவி குழந்தைகள்

    இச்சமயத்தில்தான் சிகிச்சை பலனின்றி நேற்று (10.10.2022) அதிகாலை முகலாயம் சிங் யாதவ் அவர்களின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முகலாயம் சிங் அவர்களின் மறைவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ,தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ,உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர் .

    இந்நிலையில் முலாயம் சிங் யாதவின் உடல், குருகிராம் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டம் சைபய்க்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது .இதில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்று முகலாயம் சிங் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தது போலவே திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும் ,எம்.பி.யுமான டி ஆர் பாலு அவர்களும் ,இளைஞர் அணி செயலாளரும் ,எம்.எல்.ஏ வுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்துகொண்டு முகலாயம் சிங் யாதவ் அவர்களுக்கு இறுதி மரியாதையை செலுத்தினர் .

    இதனையடுத்து முலாயம் மறைவுக்காக, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.

    அதன்படி நூமாய்ஸ் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட முகலாயம் சிங்க் யாதவ் அவர்களின் உடல் ,முழு அரசு மரியாதையுடன் இன்று (11.10.2022) மாலை தகனம் செய்யப்பட்டது.இந்த இறுதி தகன ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர் .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....