Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இப்படி செய்வது நாட்டுக்கே ஆபத்து! பாஜகவின் 'கரன்சி பாலிடிக்ஸ்'சை விமர்சித்த டி.ஆர்.பாலு

    இப்படி செய்வது நாட்டுக்கே ஆபத்து! பாஜகவின் ‘கரன்சி பாலிடிக்ஸ்’சை விமர்சித்த டி.ஆர்.பாலு

    பாஜகவின் விலைபேசும் போக்கு நாட்டுக்கே ஆபத்தானது என திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

    இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தெலங்கானா மாநிலத்தின் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரை, தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக தரப்பில் நடத்தப்பட்ட பண பேரம் தொடர்பான ஜனநாயகத்திற்குப் பேரதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், “இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியிருக்கிறார்.

    பன்முகத்தன்மை கொண்ட இந்திய துணைக் கண்டத்தின் ஒருமைப்பாட்டுக்கும், இந்திய அரசியல் சாசனத்திற்கும் எதிரான நிலைப்பாடுகளை மத்திய ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவும் அதன் தலைவர்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதையும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்கிற பாஜகவின் நிலைப்பாடுகளின் நீட்சியாக, இந்தியாவில் ஒரே கட்சி, ஒரே தலைவர் என்கிற ஜனநாயக விரோத நிலையைக் கொண்டு வர முயல்வதையும் பலமுறை திராவிட முன்னேற்றக் கழகம் சுட்டிக்காட்டியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுதொடர்பான கருத்துகளை அவ்வப்போது வலுவுடன் எடுத்து வைத்திருக்கிறது.

    இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்திட்டம்; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

    குறிப்பாக தெலங்கானா மாநிலத்தில், பாஜகவின் தேசியத் தலைவர்களின் பெயர்களைச் சொல்லியே விலை பேசப்பட்டிருப்பது குறித்தும், வெளிப்படையான பேரம், எதிர்காலச் சலுகைகள் குறித்த உத்தரவாதம் அளித்தல் என அனைத்துவிதமான சட்டவிரோதச் செயல்பாடுகளைப் பற்றிய பேச்சுவார்த்தைகளும் இதில் வெளிப்படுவதால் முழுமையான விசாரணை மூலம் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.

    ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மந்தைகளல்ல என்பதையும் பாஜக நினைவில் கொள்ள வேண்டும். 

    ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தையும் காலில் போட்டு மிதித்தபடி, மாநிலக் கட்சிகளின் அரசுகளுக்கு நெருக்கடியை உண்டாக்க நினைக்கும் இத்தகைய ‘கரன்சி பாலிடிக்ஸ்’ கலாசாரத்தை இந்திய மக்கள் எந்தக் காலத்திலும் ஏற்க மாட்டார்கள். 

    ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உரிய நேரத்தில் தீர்ப்பு வழங்குவார்கள் என்பதையும் நினைவில் கொள்க என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: 3000 குடும்பங்களை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் முதல்வருக்கு கடிதம் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....