Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைந்து செயல்பட சொல்லும் பாஜக

    எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைந்து செயல்பட சொல்லும் பாஜக

    எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைந்து செயல்பட கூறி இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    தில்லி சென்று வந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரையும் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை மற்றும் பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் இணைந்து பேசினர். அப்போது, தமிழ்நாட்டு மக்கள் திமுக ஆட்சியில் அதிருப்தியில் இருப்பதாகவும், இடைத்தேர்தலில் திமுக தோல்வியை தழுவும் என்றும் கூறினர்.

    மேலும் தமிழ்நாட்டின் நலஉங்கக்காக அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இரு தரப்பினரிடையே தெரிவித்திருப்பதாகவும் கூறினர். ஜெயலலிதா கூட திமுகவை தீய சக்தி என்றே கூறியதாகவும், உறுதியான நிலையான அதிமுகவை தான் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அதனால், ஓபிஎஸ்-இபிஎஸ் இணைய வேண்டும் என்பதையே தாங்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தனர். 

    தொடர்ந்து பேசிய அவர்கள், திமுகவை எதிர்க்க உறுதியான வேட்பாளர் வேண்டும் என்பதால், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைய வேண்டும் என்றும், ஒரே அணியாக, ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் கூறினர். 

    ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? பாஜக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்களா? அல்லது என்ன என்பது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், பாஜக நிலைப்பாட்டை தெரிவிக்க பிப்ரவரி 7 ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தனர். 

    500 மாணவிகளுக்கு இடையில் அமர்ந்த மாணவன்; மயங்கி விழுந்த சம்பவம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....