Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்முதல்வராக வேண்டுமா? ரூ.2500 கோடி கொடு - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

    முதல்வராக வேண்டுமா? ரூ.2500 கோடி கொடு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

    கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டில். இவர் 2 முறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

    விஜாப்பூர் நகரில் நேற்று மாலை பாஜக கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது 2,500 கோடி ரூபாய் பணம் இருந்தால் என்னை முதல்வர் ஆக்குவதாக சில இடைத்தரகர்கள் தெரிவித்ததாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பிஜாபூர் நகரில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், “அரசியலில் பல திருடர்கள் வருவார்கள். உங்களுக்கு டிக்கெட் வாங்கி தருகிறேன். டெல்லிக்கு அழைத்துச் செல்கிறேன். சோனியா காந்தியிடம் சந்திக்க அழைத்துச் செல்கிறேன். நட்டாவிடம் அழைத்துச் செல்கிறேன் என்று நம்மிடமே தெரிவிப்பார்கள்.

    டெல்லியில் இருந்து ஒருவன் வந்து என்னிடம் 2,500 கோடி தயாராக வையுங்கள் உங்களை முதல்வர் ஆக்குவேன் என தெரிவித்தான். ரூ.2500 கோடி என்றால் என்ன என்று நினைத்து கொண்டிருக்கிறாய் என்று நான் கேட்டேன்” என தெரிவித்தார்.

    கர்நாடக பாஜக ஆட்சியில் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இருந்தால் முதலமைச்சர் ஆகலாம் என்ற திடுக்கிடும் தகவலை பாஜக சட்டமன்ற உறுப்பினரே அம்பலப்படுத்தியிருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக எம்எல்ஏ பேச்சு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கார்நாடக மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    அட! நம்ம சூப்பர் ஸ்டாரா இது? சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் ரஜினிகாந்தின் புகைப்படம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....