Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அட! நம்ம சூப்பர் ஸ்டாரா இது? சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் ரஜினிகாந்தின் புகைப்படம்!

    அட! நம்ம சூப்பர் ஸ்டாரா இது? சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் ரஜினிகாந்தின் புகைப்படம்!

    நடிகர் ரஜினிகாந்தின் பள்ளிப் பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகின்றார்.

    இவர் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியதோடு, சில படங்களில் வில்லனாக நடித்த இவர் பின்பு பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். பின்னர் சூப்பர் ஸ்டாராகவும் மாறினார்.

    பைரவிக்கு பிறகு தொடர்ந்து நாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினிகாந்த கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து அண்ணாத்த என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது.

    rajinikanth

    தொடர்ந்து தற்போது தனது 169-வது படமாக பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது எதிர்பாராத விதமாக ரஜினிகாந்தின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

    சக மாணவர்கள் பலருடன் நடுவில் கையில் கோப்பையுடன் ரஜினிகாந்த ஸ்டைலாக நிற்கிறார். இதைக் கண்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

    இதுவரை வெளிவராத இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், தலைவர் அப்போவே பெரிய மாஸ் என்று ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அபூர்வ ராகமாக இசைத்த, இயல்பாக நடித்த ஸ்ரீவித்யாவை மறக்க முடியுமா?

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....