Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அமைச்சர் நாசருக்கு கொஞ்சம் கூட கண்ணியம் இல்லை - பாஜக அண்ணாமலை

    அமைச்சர் நாசருக்கு கொஞ்சம் கூட கண்ணியம் இல்லை – பாஜக அண்ணாமலை

    அமைச்சர் நாசர் செய்த செயலை இதுவரை இந்திய வரலாற்றில் யாரும் செய்யாத காரியம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    திருவள்ளூர் மாவட்டம், வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் இன்று மாலை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். 

    இந்தப் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று அங்கு சென்றிருந்தார். அப்போது கட்சித் தொண்டர்களிடம் நாற்காலிகளை எடுத்து வரக் கூறினார். 

    அங்கு கட்சி நிர்வாகிகள் அதிகமானோர் இருந்த நிலையில், ஒரு சில நாற்காலிகள் மட்டுமே எடுத்துவரப்பட்டது. மேலும் இதில் கால தாமதமும் ஏற்பட்டது. இதன் காரணமாக கோபம் அடைந்த அமைச்சர் நாசர் கீழே கிடந்த கல்லை தூக்கி தொண்டர் மீது வீசினார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வைரலானது. 

    இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய வரலாற்றில் எந்த அமைச்சராவது மக்கள் மீது கற்களை வீசுவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அந்த வீடியோவில் பொதுமக்கள் மீது கற்களை வீசுபவர் வேறு யாருமில்லை திமுக அமைச்சர் ஆவடி நாசர் தான் என்றும், கோபத்தில் மக்கள் மீது கற்களை வீசுகிறார் என்றும், அவருக்கு கொஞ்சம் கூட கண்ணியம் இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    மேலும் மக்களை அடிமைகள் போல் நடத்துகிறார்கள் என்றும், இது தான் உங்களுக்கான திமுக என்றும் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளதோடு, அந்தக் காணொளியையும் அவர் பகிர்ந்துள்ளார்.   

    நேபாளத்தில் நிலநடுக்கம்; ஒருவர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....