Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரியில் அதிகரிக்கும் பைக் திருட்டு சம்பவம்; சிக்கிய சிசிடிவி காட்சி!

    புதுச்சேரியில் அதிகரிக்கும் பைக் திருட்டு சம்பவம்; சிக்கிய சிசிடிவி காட்சி!

    புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி அடுத்த சிறுவந்தாடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன். இவர் புதுச்சேரி கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள தனியார் ஹோட்டலில் ஸ்டோர் பாதுகாவலராக இருந்து வருகிறார்.

    இவர் நேற்று காலை 9 மணி அளவில் வேலைக்கு வந்துள்ளார். பின்பு வேலை முடிந்து மாலை 7 மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய இடத்தில் தேடி உள்ளார்.

    அப்போது இருசக்கர வாகனம் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்த அவர் மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி யில் யாரேனும் எடுத்து உள்ளார்களா என்று தேடி உள்ளார்.

    அப்பொழுது இளைஞர் ஒருவர் தொப்பி அணிந்து கொண்டும், முக கவசம் அணிந்து படி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருசக்கர வாகனத்தில் மேல் அமர்ந்து அவர் வைத்திருந்த பல்வேறு சாவிகள் மூலம் ஒவ்வொன்றாக திறந்து பார்த்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் ஒரு சாவி பூட்டை திறந்துள்ளது. அதன் பிறகு லாவகமாக இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. இதனை அறிந்த அர்ஜுன் சிசிடிவி பதிவை எடுத்துக்கொண்டு பெரிய கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி நகரப் பகுதியில் இரு சக்கரம் வாகனம் திருடு போவது தொடர் கதையாக இருந்து வருகிறது. மக்கள் அதிக கூடும் பகுதிகளிலும், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருக்கும் பகுதிகளிலும் இதுபோன்ற வாகன திருட்டு நடந்து வருகிறது.  இதற்கு புதுச்சேரி காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது மக்களுடைய கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நேபாளத்தில் நிலநடுக்கம்; ஒருவர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....