Monday, March 25, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நீண்ட காலத்திற்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'பதான்'

    நீண்ட காலத்திற்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘பதான்’

    நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ள பதான் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. 

    ஷாருக்கானின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை பெறவில்லை என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து சில காலம் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல், இந்தியா முழுவதும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டுவந்தார்.

    ரசிகர்களும் ஷாருக்கானின் அடுத்த திரைப்படத்திற்காக காத்திருந்தனர். சில சமயங்களில் பொறுமை இழந்த ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் ஷாருக்கான் திரைப்படத்தை விரைவில் திரையில் காண வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். சொல்லப்போனால், ஷாருக்கான் அவர்களே தனது திரைப்படத்திற்காக காத்திருந்தார் என்றே கூற வேண்டும்.

    இப்படியாக சூழல்கள் இருக்க, ஒருவழியாக ஷாருக்கான் நடிக்க இருக்கும் திரைப்படங்கள் குறித்தான அறிவிப்புகள் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்தன. குறிப்பாக பதான் திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஷாருக்கானின் ரசிகர்கள் உற்சாகத்திற்கு உள்ளாகினர். 

    இந்நிலையில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள பதான் திரைப்படமானது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று ரிலீஸாகியுள்ளது. 

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கானை அவரது ரசிகர்கள் திரையரங்குகளின் திரையில்  பார்த்து மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர். 

    அமைச்சர் நாசருக்கு கொஞ்சம் கூட கண்ணியம் இல்லை – பாஜக அண்ணாமலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....