Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குகிசு கிசுஒரே ஒரு ட்வீட் ஒட்டுமொத்த ரூமெர்ஸ்சும் க்ளோஸ்! அவர்தான் மிகப்பெரிய நட்சத்திரத்தின் அடுத்தப்பட இயக்குனர்!

    ஒரே ஒரு ட்வீட் ஒட்டுமொத்த ரூமெர்ஸ்சும் க்ளோஸ்! அவர்தான் மிகப்பெரிய நட்சத்திரத்தின் அடுத்தப்பட இயக்குனர்!

    ட்ரெண்டிங்கில் உள்ள பிரபல இயக்குனர், மிகப்பெரிய தமிழ்நாட்டு நட்சத்திரத்தின் படத்தை இயக்கமாட்டார், அவர் விலகி விட்டதாக வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் மிகப் பெரிய சினிமா நட்சத்திரத்தின் அடுத்தப் படத்தை, தான் இயக்கப் போவதாக சின்ன ஒரு சமூக வலைதள எடிட் மூலம் உறுதி செய்துள்ளார், அந்த பிரபல இயக்குனர். 

    தமிழ்நாட்டின் மிகப் பெரிய சினிமா நட்சத்திரத்தின் அடுத்த படத்தை, கடந்த வாரம் மிக எதிர்ப்பார்ப்புடன் வெளியான, படத்தின் இயக்குனர் தான் இயக்க உள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். 

    அந்த இயக்குனர், இயக்கிய படத்தின் வசூல் நன்றாக இருந்தாலும் கருத்துக்கள் கொஞ்சம் தாறுமாறாகவே சுமாராகத் தான் இருந்தது. இதனால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய சினிமா நட்சத்திரம் அந்த இயக்குனரை நீக்கி விட்டு வேறு ஒரு பிரபலமான இயக்குனரை நிமியத்ததாக வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதுமட்டுமில்லாமல், கடந்த வாரம் வெளியான படத்தப் பற்றி பெரிய நட்சத்திரத்திடம் கேட்டபொழுது ‘ஐஸ்கிரீம் நல்லா இருந்துச்சு என்று அவர் கூறியதாக இந்த வாக்கியமும் சமூக வலைத்தளங்களில் மெட்டு கட்டி பரவி வந்தது. அதுவும் இன்று, நிச்சயம் இந்த இயக்குனர் இல்லை வேறொரு இயக்குனர்தான் என முடிவுகட்டி விட்டனர் நெட்டிசன்கள். 

    ஒன்று என்றால் ஒன்பது என்று கூறும் நமது நெட்டிசன்கள் அவர்களின் வேலையை தவறாமல் பார்த்து வந்த நிலையில், அந்த முக்கிய இயக்குனர் தனது சமூக வலைத்தளம் ஒன்றில் அதற்கான பதிலைக் கூறி, வாயைக் கப்பு சிப்பு என்று அடைத்துள்ளார். ஒரே ஒரு எடிட் மொத்த ரூமெர்ஸ்சும் கிளோஸ்

    இதனால், மிகப் பெரிய சினிமா நட்சத்திரத்தின் ரசிகர்கள் பலரும் எங்கள் தலைவர் அப்படி யாரையும் விலக்கிவிட மாட்டார். அந்த இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    மிகப் பெரிய சினிமா நட்சத்திரத்தின் படங்கள் கடந்த ஆண்டுகளில் வெளியாகி சொதப்பலில் தான் முடிந்தது என்றாலும் அடுத்துவரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிதான் உள்ளது. 

    ம்ம்… அது எப்படியோ உங்களுக்கு யார் யார் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    கோடி கணக்கில் அள்ளும் கேஜிஎப் சாப்டர் 2- வசூல் வேட்டை இனிதான் ஆரம்பம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....