Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐந்தாவது வெற்றியை நோக்கி லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் : தினேஷ் கார்த்திக்கை கட்டுப்படுத்தும் முனைப்பில்...

    ஐந்தாவது வெற்றியை நோக்கி லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் : தினேஷ் கார்த்திக்கை கட்டுப்படுத்தும் முனைப்பில் லக்னோ!

    ஐபிஎல் 2022  தொடரின் 31வது ஆட்டத்தில் சரிக்கு சமமான பலம் வாய்ந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மோதிக்கொள்ள உள்ளன. இந்த ஆட்டமானது டி.ஒய்.கே.பாட்டில் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.  

    இரு அணிகளும் தங்களுடைய கடைசி ஆட்டங்களில் வெற்றி பெற்று  நம்பிக்கையோடு காணப்படுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தன்னுடைய கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய கடைசி ஆட்டத்தில் வலுவான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. 

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், பவுலர்கள் ஆவேஷ் கான் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அந்த அணியைப் பொறுத்தவரை மிடில் ஆர்டர் தான் கேள்விக்குறியாகவே உள்ளது. ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் தொடர்ந்து ஒரு சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

    சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை ரவி பிஷ்னாய் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் அவரகளின் சுழல்ஜாலம் எடுபட வாய்ப்பு உள்ளது.  கே.எல்.ராகுலைப் பொறுத்தவரை பெங்களூரு அணிக்கு எதிராக சராசரியாக 83.5 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஜேசன் ஹோல்டர் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இவர்களுடன் மார்கஸ் ஸ்டாய்னிசின் ஆட்டமும் ஒன்று சேர்ந்தால் லக்னோ வலுவான இடத்தை நோக்கி முன்னேறும். 

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைப் பொறுத்தவரை தினேஷ் கார்த்திக் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார். பவுலிங்கில் ஹர்ஷல் பட்டேல் மீண்டும் இணைந்துள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலம் ஆகும். ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் நல்ல பார்மில் உள்ளார். பேட்டிங்கில் டு பிளெஸ்சிஸ், பிரபு தேசாய் மற்றும் சபாஷ் அகமது ஆகியோர் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். 

    முன்னாள் கேப்டன் கோலி மீண்டும் பழைய பார்முக்கு திரும்ப வேண்டியது கட்டாயமாக உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹஸரங்கா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இவர்களுடன் முகமது சிராஜின் பந்துவீச்சும் கணிசமாக கைகொடுத்து வருகிறது. 

    அதிக டாட் பந்துகளை வீசியவர்கள் சாதனை பட்டியலின் முதலிடத்தில் ஹர்ஷல் பட்டேல் மற்றும் இரண்டாவது இடத்தில் ஆவேஷ் கானும் உள்ளனர். லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் தலா 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 2 தோல்விகளுடன் முறையே 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிபட்டியலில் முன்னிலை பெரும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இதையும் படியுங்கள், ஹிட்லராய் வெளுத்து வாங்கிய பட்லர், யுஸ்வேந்திர சாஹலுக்கு ஹாட்ரிக் : புயல் போல சீறிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....