Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கோடி கணக்கில் அள்ளும் கேஜிஎப் சாப்டர் 2- வசூல் வேட்டை இனிதான் ஆரம்பம்!

    கோடி கணக்கில் அள்ளும் கேஜிஎப் சாப்டர் 2- வசூல் வேட்டை இனிதான் ஆரம்பம்!

    கன்னடத்தில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தை தயாரித்தவர் விஜய் கிரகண்டுர் ஆவர்.   

    கேஜிப் சாப்டர் ஒன்று, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, கடந்த வாரம் வெளியான கேஜிப் சாப்டர் இரண்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை விடவும் பெரிதாக அவர்களை கவர்ந்தது என்றே கூறலாம். யாஷின் ரசிகர்கள் மட்டுமல்ல பொது மக்களின் கருத்துகளும் படம் டாப்பு டக்கர் என்பது தான். மக்களின் மனதில் இடம் பிடித்ததற்கான ஆதாரங்களாக கேஜிஎப் சாப்டர் 2, ஐந்தாவது நாள் வசூலும் முதல் ஐந்து நாட்களின் மொத்த வசூலும் இதோ… 

    • தமிழ்நாட்டில் 5-வது நாள் வசூல்- 10.8 கோடி                                                        முதல் ஐந்து நாள் மொத்த வசூல்- 50.10 கோடி 
    • கேரளாவில் 5-வது நாள் வசூல்- 4 கோடி                                                                  முதல் ஐந்து நாள் மொத்த வசூல்- 30 கோடி 
    • தெலுங்கில் 5-வது நாள் வசூல்- 8 கோடி                                                                முதல் ஐந்து நாள் மொத்த வசூல்- 102 கோடி 
    • கர்நாடகாவில் 5-வது நாள் வசூல்- 13 கோடி                                                          முதல் ஐந்து நாள் மொத்த வசூல்- 120 கோடி
    • வாடா இந்தியாவில் 5-வது நாள் வசூல்- 27 கோடி                                                      முதல் ஐந்து நாள் மொத்த வசூல்- 230 கோடி 
    • தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் 5-வது நாள் வசூல்- 60.10 கோடி 
    • மொத்தமாக இந்தியாவில் முதல் ஐந்து நாள்களில்- 536.10 கோடி 
    • வெளிநாடுகளில் 5-வது நாள் வசூல்- 9 கோடி                                                    முதல் ஐந்து நாள் மொத்த வசூல்- 86 கோடி 
    • 5-வது நாளில் கேஜிஎப் சாப்டர் 2 உலகம் முழுவதும் செய்த வசூல்- 69.10 கோடி 
    • ஐந்து நாளில் இதுவரை கேஜிஎப் சாப்டர் 2 செய்த மொத்த வசூல்- 612.10 கோடி 

    ரசிகர்களின் படம் பார்க்கும் ஆர்வத்தையும் ஆரவாரத்தையும் பார்த்தால் கேஜிஎப் சாப்டர் இரண்டு இன்னும் சில நாட்களில் 1000 கோடியை தாண்டிவிடும் போல…கேஜிஎப் சாப்டர் 2 வசூல் வேட்டை இனிதான் ஆரம்பம்…

    இதையும் படியுங்கள், வெறித்தனமாக வேட்டையாடும் கே.ஜி.எஃப்; அதிரும் இந்திய திரையுலகம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....