Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இலங்கையின் நெருக்கடி நிலைக்கு நாங்கள் தான் பொறுப்பு : மன்னிப்பு கோரிய அதிபர் ராஜபக்சே!

    இலங்கையின் நெருக்கடி நிலைக்கு நாங்கள் தான் பொறுப்பு : மன்னிப்பு கோரிய அதிபர் ராஜபக்சே!

    இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட நாங்கள்தான் காரணம் என்று இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார். 

    இலங்கையில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் துயரப்பட்டு வருகின்றனர். அங்கு பெட்ரோல் தட்டுப்பாடு நிலவி மக்கள் சாலைகளில் பைகளுடன் காத்து கிடக்கின்றனர். கேஸ் சிலிண்டருக்கும் இதே நிலை தான். மின்சாரமும் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் துண்டிக்கப்பட்டு வந்தது. 

    மின்சாரம் தயாரிக்க தேவையான நிலக்கரியை தோண்டி எடுக்கும் பணி, பெட்ரோல் பற்றாக்குறையால் அப்படியே கிடப்பில் உள்ளது என அந்நாட்டின் பெட்ரோல் நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவிடம் உதவி கோரி இருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியா சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இந்தியா உதவுவதாக ஒப்புக்கொண்டிருந்தது. 

    இந்நிலையில் நாட்டின் இந்த மோசமான நிலைக்கு காரணமான தலைவர்கள் பதவி விலகக் கோரி இலங்கையில் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் உள்ள அவரது வீட்டின் முன்பாக போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    அதே நேரத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சே நான் பதவி விலக மாட்டேன். எனக்கு இன்னும் பதவிக்காலம் உள்ளது. அடுத்த தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டு உள்ளேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். 

    இலங்கையில் நிலைமை கையை மீறி சென்றதால் அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர 26 அமைச்சர்கள் பதவியை விட்டு விலகினர். பதவி விலகிய அமைச்சர்களில் 4 பேர் உட்பட 17 புதிய அமைச்சர்களை இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார். 

    அப்பொழுது அவர்கள் மத்தியில் பேசிய அதிபர் ராஜபக்சே, கடந்த இரண்டரை வருடங்களில் நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். கோவிட் பிரச்சினை, கடன் சுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நாம் சில தவறுகளையும் சேர்த்து செய்து விட்டோம். அவற்றை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். மக்களின் நம்பிக்கையும் மீண்டும் பெற வேண்டும். 

    நாட்டில் அந்நிய செலவாணியின் மதிப்பு குறைவதற்கு முன்னதாகவே நாம் சர்வதேச நிதியத்திடம் உதவி கோரியிருக்க வேண்டும். இலங்கையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக முற்றிலுமாக ரசாயன உரங்கள் தயாரிப்பை முற்றிலுமாக நிறுத்தியிருக்கக் கூடாது. அவ்வாறு செய்த தவறுகளினால் இன்று மக்கள் தெருக்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க காத்து கிடக்கின்றனர். அவர்களின் கோபம் நியாயமானது. செய்த தவறுகளை மீண்டும் சரி செய்வோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....