Thursday, May 9, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகிணற்றில் விழுந்த 2 கரடிகளை 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

    கிணற்றில் விழுந்த 2 கரடிகளை 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

    திருப்பத்தூர் அருகே கிணற்றில் விழுந்த 2 கரடிகளை 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். 

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அருங்கல்துருகம் அருகே வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் விவசாயி சக்ரவர்த்தி என்பவருக்கு சொந்தமானது. 

    இந்நிலையில், அங்குள்ள விவசாயக் கிணற்றில் 2 கரடி விழுந்து இருப்பதாக அந்தப் பக்கமாக சென்ற ஒரு நபர் கூறியுள்ளார். 

    இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கரடிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

    நேற்று மாலை தொடங்கிய மீட்பு பணி இரவு முழுவதும் நீடித்தது. தொடர்ந்து 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, விவசாய கிணற்றில் தவறி விழுந்த 2 கரடிகளை வனத்துறையினரும் தீயணைப்பு துறையினரும் இணைந்து பாதுகாப்பாக மீட்டு காட்டுப்பகுதிக்குள் விட்டு சென்றனர். இந்தச் சம்பவம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

    நலன் குமாராசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தியா ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....