Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகிராம மக்களை அச்சுறுத்தும் புலி; சத்தீஸ்கரில் ஒருவர் பலி..

    கிராம மக்களை அச்சுறுத்தும் புலி; சத்தீஸ்கரில் ஒருவர் பலி..

    சத்தீஸ்கரில் உள்ள காலமஞ்சன் கிராமத்தில் புலியால் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

    சத்தீஸ்கரின் ஒட்கி பகுதியின் காலமஞ்சன் கிராமத்திற்கு அருகிலுள்ளது, சூரஜ்பூர் காட்டுப் பகுதி. இப்பகுதியில் விறகு சேகரிக்க காலமஞ்சன் கிராமத்தில் இருந்து மக்கள் அவ்வபோது செல்வது வழக்கமான ஒன்றாகும். 

    அந்த வகையில் நேற்று காலை காலை 6 மணியளவில் விறகு சேகரிக்க சூரஜ்பூர் காட்டுப் பகுதிக்கு இருவர் சென்றனர். அந்த இருவரை காட்டுப்பகுதியில் இருந்த புலி தாக்கியது. 

    இதனால், இருவரும் காயமடைந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பலத்த காயமடைந்த ஒருவர் அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவரின் உடல்நிலை சீராக உள்ளது.

    அவர்களை புலி தாக்கிய இடம் அடர்ந்த காடு அல்ல, அது கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது. இங்கு எப்போதுமே கிராம மக்கள் விறகு சேகரிக்க செல்வது வழக்கம். அவ்வாறு விறகு சேகரிக்கச் சென்றவர்கள் புலியால் தாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. 

    சமீபத்தில் சர்குஜா பிரிவில் புலி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். அதே புலிதான் இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, புலியை கண்டறியும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    கந்துவட்டிக் கொடுமை; ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற குடும்பம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....