Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

    கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

    அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, எனவே
    மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த முதல் ஒருவாரம், அதாவது கடந்த 10-ந் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதன் பிறகு மழை சற்று குறைந்து மிதமான வெப்பநிலை நிலவி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாலும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவுத்துள்ளது.

    இதன் காரணமாக

    நாளை தொடங்கி 21, 22 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

    இப்படி கூட திருமணத்தை நிறுத்தலாமா? லெஹன்ஹா உடையால் மணமகள் அதிர்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....