Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇலங்கை தொடருக்கு எதிரான இந்திய தொடர்; விராட் கோலிக்கு ஓய்வு?

    இலங்கை தொடருக்கு எதிரான இந்திய தொடர்; விராட் கோலிக்கு ஓய்வு?

    இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டது. 

    இந்திய கிரிக்கெட் அணி  2023-ஆம் ஆண்டின் முதல் தொடராக இலங்கை அணியுடன் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்காக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளன. 

    இந்நிலையில், இலங்கை அணியுடன் இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடவிருக்கும் இந்திய அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. வருகிற ஜனவரி 3, 5, 7 ஆகிய தேதிகளில் இருபது ஓவர் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த இருபது ஓவர் தொடருக்கான அணிக்கு ஹார்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இருபது ஓவர் அணி:

    ஹார்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷண், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஜவேந்திர சஹல், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.

    இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

    இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது  ஐனவரி 10-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி முடிவடைகிறது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

    ஒரு நாள் அணி: 

    ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷண், ஹார்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

    பெண்களை குறிவைக்கும் தலிபான்கள்; கண்டனம் தெரிவித்த ஐ.நா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....