Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி; அசத்தும் இந்திய பவுலர்கள்.. சொதப்பும் வங்கதேசம்

    வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி; அசத்தும் இந்திய பவுலர்கள்.. சொதப்பும் வங்கதேசம்

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் வங்கதேச அணி 133 ரன்களுக்கு எட்டு விக்கெட்டை இழந்துள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. 

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 14-ஆம் தேதி காலை 9 மணியளவில் சிட்டகாங்கில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. 

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்களுள் 20 ரன் எடுத்த நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, கே. எல்.ராகுல் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். 

    இதைத்தொடர்ந்து, விராட் கோலி புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

    இதன்பின்பு, ரிஷப் பண்ட் களமிறங்கினார். புஜாராவும், ரிஷப் பண்டும் சிறப்பாக விளையாட தொடங்கினர். புஜாரா நிதானமாக ஆட, பண்ட் சற்று அதிரடியாக விளையாடினார். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பண்ட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

    களத்தில் இருந்த புஜாராவுடன், ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்தார். இவர்களின் கூட்டணி இந்திய அணிக்கு பலத்தை தந்தது. இருவரும் நிதானமாக விளையாடிக் கொண்டிருக்க, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தனது விக்கைட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 14 ரன்களுக்கு அவுட் ஆனார். 

    மொத்தத்தில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதைத்தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 

    இந்த ஆட்டத்தில், 86 ரன்களில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரவிசந்திரன் அஸ்வின், குல்தீப் ஜோடி நிதானமாக ரன்களை சேர்ந்தனர். இந்த ஜோடி 8-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து குல்தீப் 40, முகமது சிராஜ் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

    இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. இதையடுத்து, வங்கதேச அணி பேட்டிங்கில் களமிறங்கியது. 

    ஆரம்பம் முதலே இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அசத்த தொடங்கினர். வங்கதேச அணிகள் பேட்டர்ஸ் மிரண்டனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நஜ்மூல் டக் அவுட் ஆக, சாகிர் ஹாசன் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இவர்களைத் தொடர்ந்து, யாசிர் அலி, லிட்டன் தாஸ், ரஹிம் போன்றோர் சிறு சிறு இடைவெளிகளில் பெவிலியன் திரும்பினர். ஏனைய வீரர்களும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 

    மொத்தத்தில், இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. மெஹித் ஹசன் 16, எபடாட் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். குல்தீப் யாதவ் 4, சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 271 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    “இனி நான் சூப்பர்மேனாக நடிக்க இயலாது” – விடைபெறும் ஹென்றி…சோகத்தில் ரசிகர்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....