Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த கிராம விழா குழுவினருக்கு அனுமதி கோரி 4 பேர் தீக்குளிக்க முயற்சி

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த கிராம விழா குழுவினருக்கு அனுமதி கோரி 4 பேர் தீக்குளிக்க முயற்சி

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த கிராம விழா குழுவினருக்கு அனுமதி அளிக்காததை கண்டித்து, கிராம விழா குழுவினர் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    ஆண்டுதோறும் தை மாதத்தில் தமிழர் பண்டிகையான பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது ஜல்லிக்கட்டு போட்டித் திருவிழாவாகும். அதிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலக்காடு ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழப்பெற்றது ஆகும். 

    இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, அரசு அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    அப்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த கிராம விழாக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்காக விழாக்குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீரென விழாக் குழுவினரில் 4 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். 

    மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைத் நடத்த கிராம விழா குழுவினருக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர். 

    இந்தியா vs இலங்கை; இன்று நடைபெறும் இறுதிப்போட்டி… வெற்றி யாருக்கு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....