Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நாடாளுமன்றத்தில் காதலை தெரிவித்த எம்.பி!

    நாடாளுமன்றத்தில் காதலை தெரிவித்த எம்.பி!

    ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் தான் விரும்பும் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய சம்பவம் பேசும் பொருளாகியுள்ளது. 

    ஆஸ்திரேலிய மாநிலம், விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலார் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாதன் லாம்பர்ட். இவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். 

    அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, தனது காதலியான நாடாளுமன்ற உறுப்பினர் நோவா எர்லிச்சை பார்த்து, “நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?” என கேள்வி எழுப்பினார். “தற்போது மோதிரத்தை கொண்டுவரவில்லை; பின்னிரவில் அதை தருகிறேன்” என நாதன் லாம்பர்ட் தனது அன்பை வெளிப்படுத்தினார். 

    இந்த நிகழ்வின் காரணமாக நாடாளுமன்றம் சிறிது நேரம் சிரிப்பு அலையுடன் காணப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி உலக அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் விருப்பத்தையும் பெற்று வருகிறது. 

    லாம்பர்ட்க்கு ஏற்கவே 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், அவரின் காதலை நோவா எர்லிச் ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு சென்னை அண்ணா நகர் கோபுரம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....