Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி; ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு பறந்த தகவல்..

    ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி; ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு பறந்த தகவல்..

    சென்னை கே.கே.நகர் முனியசாமி சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் இன்று கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. 

    தமிழகத்தில் தற்போது அடிக்கடி ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் திருவண்ணாமலையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதுமட்டுமல்லாது,  ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல இடங்களில் ஏடிஎம் கொள்ளை முயற்சிகள் நடைபெற்றன. இச்சூழலில் மற்றுமொரு ஏடிஎம் கொள்ளை முயற்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. 

    சென்னை கே.கே.நகர் முனியசாமி சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏடிஎம் இயந்திரத்தை பெரிய கற்களை போட்டு உடைத்து, மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக வங்கியின் ஹைதராபாத் அலுவலகத்தில் இருந்து கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீஸார் பார்த்தபோது கல்லைக் கொண்டு ஏடிஎம் மையத்தில் கொள்ளை நடைபெற்றதை கண்டுபிடித்தனர்.  கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர் அங்கு இல்லை. 

    தற்போது, போலீசார் இச்சம்பவம் தொடர்பாக ஏடிஎம் மையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பொன்னியின் செல்வனை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....